தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்

நடப்பாண்டே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.jeya

தமிழகத்தில் மக்கள் உயர்தர சிகிச்சைப்பெற வேண்டும் என்று எண்ணி, டெல்லியில் இருப்பது போன்று தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, இது தமக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமிருந்து, மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து அனுப்புமாறு கடிதம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடங்களைத் தேர்வு செய்துள்ளதாகவும், அதன் படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய பகுதிகளில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழகத்தில் பல திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருவதைக் கடித்ததில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அதே போன்று எய்ம்ஸ் மருத்துவமனையையும் நடப்பாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Comments
Loading...