தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுவருடத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் 110 பேர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதி…

புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு சம்பவங்களின் பின்னனியில் , 8 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு, அடிதடி, குழுமோதல், வாள்வெட்டு, வாகன விபத்து என்பன காரணமாகவே காயங்கள் ஏற்பட்ட நிலையில் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறு காயங்களுக்கு உள்ளானோர் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வரும் நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கார் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதடைந்த நிலையில் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இக்குழு மோதல் தொடர்பில் மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மூவரை பொலிசார் தேடி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் புதுவருட தினத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் வவுனியா போக்குவரத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுதோடு , கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...