Designed by Iniyas LTD
சர்வதேச தொழிலாளர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்த புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள்..

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் ஏனைய பல்வேறு சம்பவங்களிலும் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்திற்கு உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் முற்றுமுழுதாக பூட்டப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டு இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தினுடைய தலைவர் செல்வச்சந்திரன் தெரிவித்தார்
அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய நகர்ப் பகுதிகளிலும் இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு நகர்ப் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது

வருடாவருடம் பல்வேறு நிகழ்வுகள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற போதும் இவ்வருடம் நாட்டில் நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழிலாளர் தின நிகழ்வுகள் எவையும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது