தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.வடமராட்சியில் மூவர் கைது…

??

யாழ்.வடமராட்சி செம்பியன்பற்று மாமுனைக் கடற்பரப்பில் வடமராட்சி கிழக்கு மற்றும் மன்னார் ஆகிய இடங்களைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் 77 கிலோ கிராம் கேரள கஞ்சாப் போதைப் பொருளை படகொன்றில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடற்படையினர் மூவரையும் கைது செய்தனர்.

இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகு மற்றும் பொதி செய்யப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்ட கேரளா கஞ்சா என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கஞ்சாப் பொதி டிங்கி படகொன்று மூலம் கடல் வழியாக இலங்கை கடற்பரப்பிற்கு கொண்டு வர முயற்சித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் கைதான சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாப் பொதிகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...