Designed by Iniyas LTD
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இன்று ஆராய்வு..
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இன்று திங்கட்கிழமை(20) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல்-03 கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது விவாதிப்பது? என்பது தொடர்பாக முடிவு செய்யப்படவுள்ளது.
இதேவேளை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மே-17ஆம் திகதி சபாநாயகரின் உத்தரவுக்கமைய, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.