தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களை அழித்து ஒழிக்கும் எண்ணப்பாட்டிலேயே இன்று அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன் ஒரு கட்டமாகவே தமிழர்களின் நிலங்கள் கையகப்படுத்தலும், பௌத்த மயமாக்கலும் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த மண்ணில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட இனம் வாழ முடியாத சூழல் வரும் என்றுதான் இந்த மண்ணிலே யுத்தம் கூட வந்தது.

ஆனால் யுத்தம் ஏதோ சர்வதேச சமூகத்தினுடைய ஒத்துழைப்புடன் அது முடிவிற்கு வந்தாலும் கூட அது மௌனீக்கப்பட்டாலும் கூட இன்று மீண்டும் அரசாங்கம் பழைய குருடி கதவைத் திறடி என்ற கணக்கில் திரும்பவும் எவ்வாறு தமிழ் மக்களை இல்லாதொழிப்பது என்ற எண்ணப்பாட்டில்தான் அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன’ என குறிப்பிட்டுள்ளார்.


Comments
Loading...