தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பட்டப்பகலில் துணிகரமாக படகுகளில் குதிரைகளை கடத்தும் சிறீ.கடற்படை

யாழ்.நெடுந்தீவு பகுதியின் பொக்கிஷம் என்று சொல்லப்படும் குதிரைகளை சட்டவிரோதமான முறையில் கடத்தும் நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுவருகின்றார்.

குறிப்பாக இரவு வேளைகளில் குதிரைகள் பிடிக்கப்பட்டு பட்டப்பகலில் துணிகரமாக படகுகளில் ஏற்றப்பட்டு தென்னிலங்கைக்கு கடத்தப்படுகின்றன.

Untitled

யாழ்.மாவட்டதின் சுற்றுலா துறையின் முக்கிய இடமாக காணப்படும் நெடுந்தீவில் உள்ள குதிரைகளை பாதுகாக்குமாறு கோரிக்கை விடப்பட்டு வரும் வேளை கடற்படையினரால் திட்டமிட்டு இவ்வாறான கடத்தல் நடைபெற்று வருகின்றது.

அண்மையில் நெடுந்தீவில் இருந்து 4 குதிரைகளை தென்னிலங்கைக்கு கடத்திய காவல்துறையினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் கடத்தப்பட்ட குதிரைகள் இதுவரையில் மீட்கப்படவில்லை

Comments
Loading...