Designed by Iniyas LTD
கொடானே உள்பட ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
சோமாலியா நாட்டில் ஷெபாப் என்ற தீவிரவாதக் குழு செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் தலைவரான அகமது அப்டி கொடானே வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது.
கடலோர நகரமான பராவேயை நோக்கி அவன் வாகனத்தில் சென்று கொண்டிருப்பதை அறிந்த அமெரிக்கா, அவன் சென்ற வாகனம் மீது வான் வழி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் கொடானே உள்பட ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கொடானே கொல்லப்பட்டானா? என்பது உறுதி செய்யப்படாமல் இருந்துவந்த நிலையில், பல ஆண்டுகளாக அமெரிக்க உளவுப்படையால் கண்காணிக்கப்பட்டுவந்த அகமது அப்டி கொடானே, அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகானின் செய்தி தொடர்பாளரான ஜான் கிர்பியும் உறுதிப்படுத்தியுள்ளார்.