Designed by Iniyas LTD
அம்மாவை விடுதலை செய்ய கோரி ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாநிலை போராட்டம்
இன்று கோயம்பேடு செங்கொடி அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் சென்னையில் இருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாண்டிச்சேரி ஈழ அகதிகள் முகாமில் இருந்து ஈழ அகதிகள் அம்மாவின் விடுதலைக்காய் குரல் கொடுக்கும் அதே வேளை சென்னைக்கு அருகாமையில் உள்ள குமுடிப்பூண்டி மற்றும் புழல் அகதிகள் முகாமில் இருந்து மக்கள் வர விருப்பிருந்தும் அம்முகாம்களில் இருந்து மக்களை சில அதிகாரிகள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள விடவில்லை.
எனினும் இம் மாபெரும் உண்ணா நிலை போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாட்டு இளைஞர் பேரவை தலைவருமான தனியரசு அவர்களும், அஇஅதிமுக தலமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி அவர்களும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் அவர்களும், இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கொளதமன் அவர்களும் ,புரட்சி பாரதபொதுச்செயலர் பூவை ஜெகன் மூர்த்தி அவர்களும், கவிஞர் புலமைப்பித்தன் அவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவுகளே மேலதிக நேரடி தொடர்புகளுக்கு:
0091 9840356997 – மோகன்
0091 9962238168 – மோகன்
0091 9710797594 – அசோக்
