தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆதித்யா கார்வாலை வியந்து பாராட்டிய ஷேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஷேவாக் என வர்ணிக்கப்படும் ஆதித்யா கார்வல் `அண்டர்-19’ ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அசத்தி வருகிறார்.Aditya_Gharw

18 வயதாகும் இவர் இந்த ஒருநாள் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 2 இரட்டைச் சதங்கள் உட்பட 763 ஓட்டங்களை விளாசியுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்து இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வியந்து பாராட்டியுள்ளார்.

மேலும் இவரது ஆட்டத்தினால் பரவசமடைந்த இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா ஆதித்யாவுக்கு மட்டை ஒன்றை பரிசு அளித்ததோடு, “ஆதித்யா துடுப்பாட்டம் செய்வதை பார்க்க நான் எப்போதும் ஆவலாக இருக்கிறேன்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

இவரது அபூர்வத் திறமையால் இவர் ‘சோட்டா ஷேவாக்’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார். காரணம் இவர் எடுத்துள்ள 763 ஓட்டங்கள் 519 பந்துகளில் விளாசப்பட்டுள்ளது. இதில் 68 பவுண்டரிகள் 38 சிக்சர்கள் அடங்கும்.

முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரும், இந்த தொடரில் நடுவராகவும் பணியாற்றிய சதானந்த் விஸ்வநாத் ஆதித்யாவின் ஆட்டத்தைப் பார்த்துக் கூறுகையில் “உத்தி ரீதியாக வலுவாக இருக்கிறார். எல்லா ஷாட்களையும் இவரால் ஆட முடிவதாக பவுலர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது ஷாட்களில் உள்ள அழுத்தம், நீண்ட தூரம் பந்துகளை விரட்டியடிக்கும் இவரது அபூர்வத் திறமையைக் கண்டு அசந்துபோனேன்” என்று கூறியுள்ளார்.

இவரைப் பற்றி அணியின் பயிற்சியாளர் சரத் ஜோஷி கூறியதாவது, “எவ்வளவு நெருக்கமாக களத்தடுப்பு அமைத்தாலும் இவரால் இடைவெளியை சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்

Comments
Loading...