Designed by Iniyas LTD
செங்கோட்டை நகர தேவாலயத்தில் அதிமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனை
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டுமென்று செங்கோட்டை தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்கோட்டை ஏ.ஜி தேவாலயத்தில், செங்கோட்டை நகர அதிமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைப்பெற்றன.
இந்நிகழ்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் , மாநிலங்களவை துணைத்தலைவர் முத்துகருப்பன்,மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்,மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் முத்துசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். பாஸ்டர் பால்பிரகாசம் தேவ செய்தி வாசித்தார்.
பின்னர் செங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் “கருவின் குற்றமே காத்திருக்கு ஸ்பெக்ட்ரமே” என்ற துண்டு பிரசுரத்தையும் அவர்கள் பொது மக்களிடம் விநியேகித்துள்ளனர்.