தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மலையகத்தில் தங்கியுள்ள இந்தியர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

மலையகத்தில் தங்கியுள்ள இந்தியர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆயிரக் கணக்கான இந்தியர்கள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இரகசியமான முறையில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பிரஜைகள் போன்று போலியான ஆவணங்களைத் தயாரித்து பெருந்தோட்டப் பகுதியில் இந்தியர்கள் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.malayakam

குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் நடத்திய தேடுதல் வேட்டைகளின் சில இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை, தலவாகலை ஆகிய பகுதிகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பதினைந்து ஆண்டுகளாக இலங்கையில் தங்கியிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் காணப்பட்ட அடையாள அட்டைகள் போலியானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...