தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராமேஸ்வரம் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது

ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் நள்ளிரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 படகுகள் கடலில் மூழ்கின. மண்டபம், கோயில்வாடி மற்றும் வடக்கு துறைமுகப்பகுதியில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. மேலும், சீற்றம் தொடர்வதால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.Furious Sea

இதனால் பாம்பன் பகுதியில், கரையோரத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் சுனாமி குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாகவே ராமேஸ்வரத்தில் கடற்காற்று மற்றும் தொடர்மழை காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். கடல்சீற்றத்தால் படகுகள் சேதமடையாத வகையில் தூண்டில் வளைவுடன் கூடிய துறைமுகத்தை அமைக்கவும் மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Loading...