Designed by Iniyas LTD
சிறிதரனின் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் செய்த ஈபிடிபி
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈபிடிபியினர் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கொடும்பாவியையும் எரித்துள்ளனர். மேலும், பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு ஒன்றினையும் சமர்ப்பித்துள்ளனர்.