தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 10-ஆவது நாளை எட்டியுள்ளது

இலங்கைச் சிறையில் உள்ள 81 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 10-ஆவது நாளை எட்டியுள்ளது.fishers

அவர்களது 85 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மிதவை வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை மானிய விலையில் வழங்கவேண்டும் ,உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இதே கோரிக்கைகளுடன் கடந்த 12-ஆம் தேதி முதல் புதுக்கோட்டை ஜெகதாப் பட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுடன் கோட்டைப்பட்டினம் மீனவர்களும் இன்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

Comments
Loading...