Designed by Iniyas LTD
தென் ஆப்ரிக்காவுக்கு செக்’ வைத்த ஆந்த்ரே ரஸ்செல்
தென் ஆப்ரிக்கா– மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்கா 8 விக்கெட்டுக்கு 262 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பெரிதும் சோபிக்காத நிலையில், டேவிட் மில்லர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அவர் 130 ஓட்டங்களை சேர்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும் சாமுவேல்ஸ்(68), டேரன் சேமி(51) அணி இலக்கை நோக்கி பயணிக்க உதவினர்.
அணியின் விக்கெட்டுகள் விரைவாக சரிந்த நிலையில் 8–வது வரிசையில் களம் புகுந்த ஆந்த்ரே ரஸ்செல் தனிநபராக போராடி தென் ஆப்ரிக்காவுக்கு ‘செக்’ வைத்தார்.
அப்போட்டின் பந்தில் இமாலய சிக்சர் அடித்து மேற்கிந்திய தீவுக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்த ரஸ்செல் 64 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார்.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 266 ஓட்டங்கள் எடுத்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 9 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
கடைசியாக 2006–ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியும், ஒன்றில் சமநிலையையும் சந்தித்து இருந்தது.
வெற்றி பெற்றாலும் 5 போட்டி கொண்ட இந்த தொடரை தென் ஆப்ரிக்கா 3–1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.