Designed by Iniyas LTD
தமிழ்நாடு ஈழத்தமிழர் அகதி முகாம்களில் ஒன்றான பவானிசாகரில் உணர்வெழுச்சி பொங்க மாவீரர் தினம் அனுஸ்டிப்பு
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஈழத்தமிழர் குடியிருப்பில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மக்கள் கலந்து கொண்டு மாவீரர் ஈகத்தை ஏந்தி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
மாவீரர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு , அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக முறைப்படி தொடங்கப்பட்டது .
ஈழத்தமிழர் அகதி முகாமில் பல்லாயிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மண்ணுக்காய் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்க அஞ்சலி செலுத்தியமை இதுவே முதல் தடவை என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழர்கள் மாத்திரமின்றி, தமிழக மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணர்வுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.













