தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் போட்டிகளில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார்.Serena

தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், இரண்டாவது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் செரீனா கைப்பற்றினார். எனினும் இரண்டாவது செட்டை கைப்பற்ற ஷரபோவா கடினமாக போராடினார். இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில் 6-6 என்ற புள்ளியில் இருவரும் சம நிலையில் இருந்தனர். இதனால் டை பிரேக்கர் வழங்கப்பட்டது. இதில் 7-5 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி 2வது செட்டையும் 7-6 என்ற புள்ளி கணக்கில் தனதாக்கினார் செரீனா.

இதனால் இறுதிப்போட்டியில் தோற்று ஷரபோவா வெளியேறினார். இப்போட்டியில் வென்றதன் மூலம் 19வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார் செரீனா. இன்று ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் முர்ரேவும், ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

Comments
Loading...