தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமையல் எரிவாயு மானியம் தொடர்பாக மோடி ஆய்வு

சமையல் எரிவாயு மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தின் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு நடத்தியுள்ளார். இதுதொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர ப்ரதான், பிரதமருக்கு விரிவான விளக்கம் அளித்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Narendra_Modi

ஆதார் அடையாள அட்டை இருப்பவர்களும், அது இல்லாதவர்கள் வங்கிக் கணக்கை அளித்தும் இந்த திட்டத்தில் இணைந்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 15 கோடியே 30 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களில் 9 கோடியே 75 லட்சம் பேர் இதில் இணைந்துள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை 3 ஆயிரத்து 654 கோடி ரூபாய் மானியம் வரவு வைக்கப்பட்டதாகவும், உலகின் மிகப் பெரிய நேரடி மானிய திட்டமாக இது பெயர் பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...