Designed by Iniyas LTD
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது- யாழ் மீனவர்கள்
இலங்கையில் ஆட்சி மாற்றம் உருவானதன் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாக யாழ்.குடாநாட்டு மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து கடற்படையினர் அசமந்தப் போக்கில் இருப்பதாகவும் தங்கள் முறைப்பாடுகளுக்கு செவிசாய்ப்பதில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மக்கள் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் (றோலர்) இலங்கை கடல் எல்லைக்குள் வருவதனை கடற்படையினர் ஒரு அளவுக்கு தடுத்தார்கள். மீனவர்களையும் கைது செய்திருந்தார்கள்.
ஆனால் தற்போது அவ்வாறான நடைமுறை இல்லை. நாங்கள் முறைப்பாடு கொடுப்பதற்குச் சென்றாலும் அதனை கடற்படையில் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்கள் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் உள்ளனர். ஆதி கோவிலடி சங்கத்தலைவர் கூறியிருக்கின்றார்.
வலைகள் அறுக்கப்பட்டு துன்பங்களை அனுபவிப்பதாகவும், சமாசத்திடம் கூறியும் நடவடிக்கையில்லை. எனவே நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது குருநகரிலிருந்து 6 கிலோமீற்றர் தூரத்திற்கு வருகின்றார்கள்.
எனவே இந்த விடயம் தொடர்பில் இந்திய இலங்கை அரசாங்கங்கள் எல்லை தாண்டும் விடயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். அதனை நாங்கள் விரும்புகின்றோம். பல முறைப்பாடுகள் இருக்கின்றன.
தற்போதைய அரசு எரிபொருள் விலை குறைத்துள்ளது. இதில் தூரக்கடலுக்குச் சென்று தொழில் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு சென்றால் இந்திய இழுவை படகுகள் நிற்கின்றன.
எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்.