Designed by Iniyas LTD
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும், அவரது கூட்டத்தையும் தண்டிக்க வேண்டும் – கி.வீரமணி
இலங்கையில் நடைபெற்றது அப்பட்டமான இன அழிப்புப் படுகொலை என்பதை வலியுறுத்தி இந்திய அரசும் நாடாளுமன்றத்தில் ஒரு தனித் தீர்மானமே கொண்டுவர முன்வர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …. இலங்கையில் நடைபெற்றது அப்பட்டமான இனப் படுகொலை என்றும், ஐ.நா. வெளியில் இருந்து சுதந்திரமானவர்களை வைத்து அதை விசாரணை செய்து குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும், அவரது கூட்டத்தையும் தண்டிக்க வேண்டும் என்று இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது அனைத்து மக்களாலும் வரவேற்று பாராட்டக்கூடியது ஆகும். இந்திய அரசும், இலங்கையில் நடைபெற்றது அப்பட்டமான இன அழிப்பு படுகொலை என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் ஒரு தனித் தீர்மானமே கொண்டுவர முன் வரவேண்டும். எதிர்வரும் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில், இப்படி ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவும், வடமாகாண அரசினால் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் கருத்தை ஆதாரமாக்கி, தமிழர் இனப்படுகொலை பற்றி ஐ.நா.வின் சுதந்திரமான ஒரு விசாரணை குழு நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.