தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாறன் சகோதரர்களின் முடக்கப்பட்டுள்ள சொத்து விவரங்கள் வெளியீடு

ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் முடக்கப்பட்டுள்ள மாறன் சகோதரர்களின் 742.58 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து விவரங்களை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது.012

இதன்படி தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் 7.47 கோடி ரூபாய் மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகை முதலீடு சன் டைரக்ட் நிறுவனத்தில் செய்துள்ள 31.34 கோடி ரூபாய் நிரந்தர டெபாசிட் தொகை தெற்கு ஆசியா எப்.எம். நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள 6.19 கோடி நிரந்தர டெபாசிட் தொகை பரஸ்பர நிதி நிறுவனயங்களில் முதலீடு செய்துள்ள 15.14 கோடி ரூபாய் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

இதேபோல் கலாநிதி மாறன் பெயரிலான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிரந்தர வைப்பு நிதி, 2.78 கோடி ரூபாய் மதிப்புள்ள பரஸ்பர நிதி நிறுவன முதலீடுகள், சன் டைரக்ட் நிறுவனத்தில் உள்ள 139 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

மேலும் கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதி பெயரில் உள்ள 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிரந்தர வைப்பு நிதி தொகை, 1.78 கோடி ரூபாய் மதிப்புள்ள பரஸ்பர நிதி நிறுவன முதலீடுகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

மேலும், கல்காம் நிறுவனத்துக்குச் சொந்தமான 171.55 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டடம் சன் நெட்வொர்க் டிவி நிறுவனத்துக்குச் சொந்தமான 266 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டடங்கள் ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Comments
Loading...