தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர் டெவிலிஸ் மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இன்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டுமினி தலைமையிலான டெல்லி டேர் டெவிலிஸ்சை சந்திக்கிறது.

2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.delhi_chennai

அணித்தலைவர் டோனி, ரெய்னா, ஜடேஜா, மேக்குல்லம், சுமித், பிராவோ, டுபெலிசிஸ், மைக் ஹஸ்சி போன்ற தலைசிறந்த வீரர்கள் சென்னை அணியில் உள்ளனர்.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி மோசமாக விளையாடியதால் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன.

யுவராஜ்சிங்கை 16 கோடி ரூபாவுக்கு எடுத்தது. இதே போல ஜாகீர்கான், இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ், அல்பி மோர்கல், அமித்மிஸ்ரா அந்த அணியின் புதிய வீரர்கள் ஆகும்.

சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட முடியாது என்பதால் மேத்யூஸ் விளையாடமாட்டார்.

அணித்தலைவர் டுமினி, குயின்டன் டிகாக், மனோஜ் திவாரி, நாதன் கோல்ட்டா போன்ற சிறந்த வீரர்களும், டெல்லி அணியில் உள்ளனர்.

சென்னையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறவில்லை. டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் சென்னை அணியின் உள்ளூர் ஆட்டம் நடந்தது.

தற்போது சென்னை சூப்பர் கிங்சின் உள்ளூர் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Comments
Loading...