தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத கைது நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றது – பொன் .செல்வராசா

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத கைது நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போதிலும் கைது நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.pon.selvarasa

இவ்வாறான கைதுகள் தொடர்ந்தால் மஹிந்த அரசாங்கத்திற்கு புகட்டிய பாடத்தை புதிய அரசாங்கத்திற்கு புகட்ட மக்கள் தயங்க மாட்டார்கள். வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தொடர்ந்தும் நிச்சயமற்ற தன்மையுடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த அரசாங்கத்தின் பத்தாண்டு கால ஆட்சியின் போது தமிழ் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்க நேரிட்டது.புதிய அரசாங்கமும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

Comments
Loading...