Designed by Iniyas LTD
சட்டத்துறை ஆய்விற்கு பிறகே ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு குறித்து முடிவெடுக்கப்படும்: சித்தராமய்யா
கர்நாடக அரசு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என அம்மாநில முதலைமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டத்துறை ஆய்வு செய்து வருவதாகவும், ஆய்வுக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், அரசு சிறப்பு வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா சட்டத்துறை, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார் ஆகியோரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சித்தராமையா மேல்முறையீடு தொடர்பாக கட்சியின் தலைமையை தாம் தொடர்பு கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்ய ஆச்சார்யா, ரவிவர்மா குமார் ஆகியோர் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, மேல்முறையீடு தொடர்பாக நல்ல முடிவினை எடுக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.