Designed by Iniyas LTD
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு – கர்நாடகா அரசு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து இன்று பெங்களுருவில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் மேல்முறையீடு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் கடந்த மே 11ம் திகதி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து பெங்களூருவில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.