Designed by Iniyas LTD
தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இம்மாதம் தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இம்மாதம் (ஜூன்) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 50 தேர்தல் பொறுப்பாளர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதி (நேற்று முன்தினம்) தொடங்கிய நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளரான முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் 4-ல் உள்ள தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் தனது வெட்பு மனுவை தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின் போது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், சசிகலா, எம்.பி வெங்கடேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக ஜெயலலிதா வருகையொட்டி தண்டையார்பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து இரட்டை இலை காண்பித்த படியே தொண்டர்களின் வாழ்த்துக்களை அவர் ஏற்றுக்கொண்டார்.