Designed by Iniyas LTD
ஐஐடி மாணவர் அமைப்பு மீதான தடை நீக்கம்: ஸ்டாலின், ஜி.கே.வாசன் வரவேற்பு
சென்னை ஐஐடியில் செயல்பட்டு வந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் மீதான தடை நீக்கப்பட்டதற்கு திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
விவாதங்களுக்கும் , கருத்துப் பரிமாற்றங்களுக்கும் நமது கல்வி நிறுவனங்கள் போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களின் விதிகளுக்கு உட்பட்டு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள மாணவர் அமைப்புகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தடை நீக்கப்பட்டது மாணவர்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார். ஐஐடி நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவர்கள் இனி கல்வியில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.