தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும்: பிரகாஷ் ஜவடேகர்

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

prakash-javaedekarபாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 2வது நாளாக கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாரடைஸ் ரிசார்ட்ஸில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய சுறறுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை செüந்தர்ராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர்கள் லட்சுமணன், மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன்,  வானதி சீனிவாசன் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்,

வருகிற 2016ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக பாரதீய ஜனதா கட்சி அசைக்கமுடியாத மிகப்பெரிய மாற்றுச்சக்தியாக விளங்கும்.மோடி தலைமையிலான ஆட்சிக்கு கிராமங்கள் தோறும் மக்களிடையே பா.ஜ.கவுக்கு நல்ல வளர்ச்சி மற்றும் நற்பெயர் கிடைத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டு  தடை செய்யப்பட்டது. அதில் சட்டரீதியிலான பிரச்சனை உள்ளதால் தேவைப்பட்டால் சில மறு சீரமைப்புகள் செய்ய வேண்டி வரும். உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசு காவிரியில் புதிய அணைகள் கட்டப்படுவது தொடர்பாக இதுவரை மாநில அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த வரைவு திட்டங்களும் வரவில்லை. நாங்கள் நதிநீர்பிரச்சனையில் எப்போதுமே தேசிய கண்ணோட்டத்துடன் பார்த்தே முடிவு செய்வோம்.எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் கருத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கமாட்டோம். தேசிய அளவில் நதிநீர்களை வீணாகாமல் முழுமையாக பயன்படுத்தும் வகையிலும், தண்ணீர் உபரியாக கிடைக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...