Designed by Iniyas LTD
இந்தியா : புதிதாக 6 ஐஐஎம்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் புதிதாக 6 ஐஐஎம்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் ஆந்திராவில் விசாகப்பட்டினம், மகாராஷ்ட்ராவில் நாக்பூர், பஞ்சாப்பில் அமிர்தசரஸ், ஒடிஷாவில் சம்பல்பூர், பீகாரின் புத்த கயா, ஹிமாசல பிரதேசத்தில் ஷிர்மார் ஆகிய நகரங்களில் ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது தவிர இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் பிரத்யேக சரக்கு போக்குவரத்து பாதை அமைக்கும் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 81 ஆயிரத்து 459 கோடி ரூபாயாக உயர்த்தும் முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு 3 ஆண்டுகளுக்கு உயர்தர இரும்புத் தாது அனுப்பும் திட்டத்துக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.