தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் மாணவிகளை காணவில்லை

missingகிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பாடசாலை மாணவிகள் மூவரை நேற்று முதல் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவிகள் மூவரும் நேற்று மாலை திங்கட்கிழமை வீட்டிலிருந்து  வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவர்களுடைய பெற்றோர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

Comments
Loading...