தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மரண தண்டனையை ஒழிக்க இதுவே சரியான தருணம் – சட்ட ஆணையம்

Justice-A.-P.-Shahதூக்கு தண்டனை விதிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசால்  அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் தனது பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது.  டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி. ஷா தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. பயங்கரவாதம் தவிர்த்த மற்ற அனைத்து வழக்குகளிலும் தூக்கு தண்டனை விதிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மரண தண்டனையை ஒழிக்க இதுவே சரியான தருணம் என்றும் சட்ட ஆணையம் கூறியுள்ளது.

அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல், மரண தண்டனையை ஒழிப்பை முன்னெடுப்பதற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனையை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்க இனியும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தூக்கு தண்டனையை சட்ட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என அரசுசாரா அமைப்புகள் பலவும் வலியுறுத்தி வரும் நிலையில், சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரை புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

Comments
Loading...