தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடனை செலுத்தாத 18 உள்ளூராட்சி சபைகளின் மீது சட்டநடவடிக்கை : பைசர் முஸ்தபா

faizer-mustaphaநிதி அமைச்சுடமிருந்து வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாத உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தற்போது 18 உள்ளூராட்சி சபைகள் 659 மில்லியன் ரூபா கடனை அமைச்சுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நிதி உள்ளூராட்சி சபைகள் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியிலிருந்து வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே உள்ளூராட்சி சபைகளின் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

இந்நிலையில், கடன் தவணைப் பணம் செலுத்தத் தவறியமைக்கான விளக்கத்தைக் கேட்டு குறித்த உள்ளூராட்சி சபைகளுக்கு, முதலாவது கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர்  கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

Comments
Loading...