தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல தமிழறிஞர் நொபுரு கரஷிமா மரணம்!

noboruஜப்பானைச் சேர்ந்த பிரபல தமிழறிஞர் நொபுரு கரஷிமாவின் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 டோக்யோ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகவும், கிழக்காசிய வரலாற்றுத் துறையில் ஆய்வு அறிஞராகவும் திகழ்ந்த பேராசிரியர் கரஷிமா உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார்.

 உலகத் தமிழ் மன்றத்தின் தலைவராக கடந்த 1989 முதல் 2010 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றியுள்ளார். தமிழகத்தின் மொழி, சமூக, பண்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்டு பல நூல்களை அவர் எழுதியுள்ளார். இந்திய கல்வெட்டு கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, சோழர் கால காலவெட்டுகள் குறித்தும் கரஷிமாக ஆய்வுகளை மேற்கொண்டவர்.

 1995ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்திய பெருமை அவருக்கு உண்டு. இவரின் மொழியியல், வரலாற்று ஆய்வுகளைப் பாராட்டி இந்திய அரசு நொபுரு கரஷிமாவுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

Comments
Loading...