Designed by Iniyas LTD
வங்காளதேசத்தில் மசூதிகளில் குண்டு வெடிப்பு! ஆறு பேர் படுகாயம்
வங்கதேசத்தில் இரு மசூதிகளில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 6 பேர் காயமடைந்தனர்.
வங்கதேசத்தின் முக்கியத் துறைமுக நகரான சிட்டகாங்கில் உள்ள கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள மசூதிகளில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. சிட்டகாங் மற்றும் இஸ்ஸா கான் கடற்படைத் தளத்தில் உள்ள இரு மசூதிகளில் பிற்பகல் தொழுகைக்குப் பிறகு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 6 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ளோம் என்று சிட்டகாங் நகரின் காவல் துறை தெரிவித்துள்ளது.