Designed by Iniyas LTD
கிறிஸ்துமஸ் தினத்தன்று பூமியை கடக்கும் விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது! சர்வதேச வானவியல் ஆய்வு நிறுவனம்
கிறிஸ்தமஸ் தினத்தன்று பூமியில் சுனாமி ஏற்பட்டு பாரிய அழிவு ஏற்படவுள்ளதென தகவலில் எந்த வித உண்மையுமில்லை என சர்வதேச வானவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா வனவியல் ஆய்வு மையம் விடுத்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது..
பூமியில் இருந்து 11 மில்லியன் கி.மி தொலைவில் குறித்த வின் கல் பயணிக்கவுள்ளது. வின் கல் கடந்து செல்லும் போது எரிமலைகள் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் புவி அதிர்வுகள் ஏற்பட்டு சுனாமி ஏற்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டிருந்தது.
எவ்வாறாயினும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தினை விட 28 மடங்கு தொலைவில் குறித்த விண்கல் பயணிக்க இருப்பதாக சர்வதேச நட்சத்திர ஆய்வு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2011ம் அக்டோபர் 16ம் திகதி ஆண்டு இவ்வாறன விண்கல் ஒன்று பூமியை கடந்து சென்றது. அதே வேளை கடந்த அக்டோபர் 31ம் திகதி பூமிக்கு அருகில் பயனிக்கவுள்ளதாக கூறப்பட்ட விண்கல் இறந்த வால் வெள்ளியாக மாறியது விசேட அம்சமாகும். இந்த நிலையில் எதிர்வரும் 25ம் திகதி பூமியை கடக்கும் விண்கல்லால் பூமிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.