Designed by Iniyas LTD
விராட் கோஹ்லிக்கு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது
ஆக்ரோஷ ஆட்டத்தால் அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த விராட் கோஹ்லிக்கு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், விளையாட்டு உலகில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும்.
அந்த வகையில், சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே போல் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை மிதாலி ராஜிம், வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானியும் பெறுகிறார். விருது வழங்கும் விழா வருகிற 5– ஆம் திகதி மும்பையில் நடக்கவிருக்கிறது.