தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நல்லாட்சியில் டக்ளஸ் தொண்டமானுக்கு அமைச்சு?

douglas devananda thondaman_CI

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு விரைவில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாட்களில் தற்போதைய அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றங்களின் போது முன்னாள் அமைச்சர்களான தொண்டமான் மற்றும் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அண்மையில் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்திருந்த திலக் மாரப்பனவிற்கு மீளவும் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் சாசனம் தொடர்பிலான அமைச்சுப் பதவியொன்று விரைவில் திலக் மாரப்பனவிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

நிதி அமைச்சு, நீதி அமைச்சு உள்ளிட்ட முக்கியமான நான்கு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்பய்பட்டால் அதற்கு நிகரான பதவிகளை வழங்குமாறு குறித்த அமைச்சர்கள், அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...