தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செம்பரம்பாக்கம் நீர்திறப்பு தொடர்பாக நீதிவிசாரணை: திமுக போராட்டம்

11செம்பரம்பாக்கம் நீர்திறப்பு தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் : 1

மத்திய வானியல் ஆய்வு மையம் எச்சரித்தும் தமிழக அரசு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை.

இந்த காரணத்தினால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று ஏறத்தாழ 33,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தினால்தான் வீடுகளில் வெள்ளம் புகுந்து பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் வாழ்வாதாரச் சிதைவும் ஏற்பட்டன என நீர் மேலாண்மை வல்லுனர்களும், ஊடகங்களும், ஏனைய கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேரிழப்பு ஏற்படுவதற்கு யார் காரணம் என்பது குறித்தும், திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும்  விசாரிப்பதற்கு தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றினை  அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள், தமிழக ஆளுநரிடம் நேரடியாகச் சென்று வழங்கிய மனுமீது உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பேரணியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் : 2

வெள்ள நிவாரண நிதியை முறையாக பாதிப்புக்கு ஆளான மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்காமல், ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாக ஆதாரபூர்வமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, வெள்ள நிவாரணம் பாதிப்புக்கு ஆளான அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி முறையாகப் போய்ச் சேருவதை உறுதி செய்ய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அவர்கள் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று இந்தப் பேரணியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் : 3

அடையாற்றின் கரையோரம் குடிசைகள் அமைத்து வாழ்யது வரும் ஏழை எளிய மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதில் வேகம் காட்டி வருகிறது. இன்னும் நான்கு மாத காலத்தில் இந்தப் பகுதிகளைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்தப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பலரும் பணிக்குச் செல்லக்கூடிய நிலையில் உள்ளனர். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்தமக்களை சென்னைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே மறு குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பேரணியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Comments
Loading...