Designed by Iniyas LTD
டி.வி சீரியலை பார்த்து தூக்கில் தொங்கிய குழந்தை!
குழந்தைகள் பெரியவர்கள் என்ற வயது வித்தியாசம் ஏதுமின்றி, தனது குப்பையான காட்சிகளால் பலரது உளவியலையும் அன்றாடம் சிதைத்து வரும் டி.வி சீரியலைப் பார்த்து 11 வயது சிறுவன் ஒருவன் தூக்கி மாட்டிக் கொண்டு பலியாகியுள்ள சம்பவம் பெற்றோர்களை உலுக்கி எடுத்துள்ளது.
மும்பையின் மராத்வாடா பகுதியில் உள்ள ப்ளவர்ஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பே இந்தக் கொடூர சம்பவத்தால் வெறுமையாக காணப்படுகிறது. வழக்கம் போல் கடந்த திங்கள் அன்றும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஷேக் சஜீத்(11), தனது தம்பி மற்றும் அக்காவுடன் சாப்பிட்டுக் கொண்டே டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது டி.வி சீரியல் ஒன்றில் பெண் ஒருவர் தூக்கு மாட்டிக் கொள்வது போன்ற காட்சி வர, அக்கா உனக்கு எப்படி தூக்கு மாட்டிக் கொள்வதென்று தெரியுமா? என்று தன் சின்னக்கண்களால் ஆச்சர்யமாக கேட்டு, ஆர்வமிகுதியால் அக்காவின் முன்பாகவே அதை அவன் செய்தும் காட்டியுள்ளான்….
சம்பவம் நடந்த போது சிறுவனின் பெற்றோர்கள் வெளியே சென்றுள்ளனர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத இந்த கொடூரத்தை காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். விபத்தால் ஏற்பட்ட மரணம் என்று இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.