தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 29-ம் தேதி தாக்கலாகிறது – ஜெயந்த் சின்ஹா

15TH_CITY_PARLIAME_1144100f2016-17-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 29-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இத்தகவலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மோடி அரசு பதவியேற்ற பின் தாக்கல் செய்யும் 2-வது முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

 முந்தைய பட்ஜெட்டில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டிலும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அருண் ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பட்ஜெட் தயாரிப்புக் குழுவில் நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா, நிதித்துறை செயலாளர் ரத்தன் வட்டல், பொருளாதார விவகாரங்களுக்கான துறை செயலாளர் சக்தி காந்த தாஸ், வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா, பங்கு விலக்கல் துறை செயலாளர் ஆராதனா ஜோரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Comments
Loading...