தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் அபிலாசையின் வெளிப்பாடு பொங்குதமிழ்: 16 வருடங்கள்

050914mullaitivu3

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை கலைநிகழ்வுகள் மூலம் உலக அரங்கில் முன்வைப்பதே பொங்கு தமிழ் ஆகும்.

ஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு இருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது.

தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் முதலிய கோரிக்கைகள் ஈழத் தமிழ் சமூகத்தின் அபிலாசைகளாக முன்வைக்கப்பட்டன.

பொங்குதமிழ் நிகழ்வு ஈழத்தின் பிற பகுதிகளிலும், புகலிட நாடுகளிலும் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

பொங்கு தமிழ் உலகத்தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் ஸ்ரீலங்கா அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும் தமது குரலை வெளிப்படுத்தும் ஒர் அரங்கு.

பல்வேறு சுதந்திரங்கள் உறுதி செய்யப்பட்ட மேற்குநாடுகளில் வெளிவரும் ஒரு குரல். தமிழர்கள் ஸ்ரீலங்கா அரசின் கொடுமைகளுக்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு அரங்காக முக்கியம் பெறுகிறது.

நியூசிலாந்து, இத், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், பெல்ஜியம், நெதர்லாந்து, பின்லாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா,
மெல்பேர்ண், சிட்னி, ஐக்கிய இராச்சியம் முதலிய நாடுகளிலும் பொங்குதமிழ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டில் இராணுவ ஆக்கிரமிப்புக்களின் மத்தியில் நடாத்தப்பட்டு பதினாறு ஆண்டாகும் நிலையில் பொங்குதமிழ் நிகழ்வு தமிழ் ஈழப் போராட்டத்தில் மிகவும் முக்கியம் பெறுகின்றது.

 

 

 

Comments
Loading...