தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் கருப்புக்கொடி போராட்டம்!

protest-at-moratuwaவவுனியா நகரசபைக்கு முன்பாக உளள் பொங்குதமிழ் தூபிக்கு அருகில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நியாயம் வழங்கப்படும் என்று அன்றைய பொதுஅபேட்சகர் மைத்திரிபால சிரிசேன வாக்குறுதியளித்திருந்தார்.

எனினும் அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்து விட்ட நிலையிலும் ஜனாதிபதி மைத்திரிபால தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  இதனால் மக்கள் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினமான இன்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற  இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், தமது வாயை கறுப்புத் துணியால் கட்டியவாறும் கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

Comments
Loading...