தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதல் தடவையாக அமெரிக்க பள்ளிவாசல் சென்ற ஒபாமா

ஜனாதிபதியான பின்னர் முதல் தடவையாக அமெரிக்க பள்ளிவாசலொன்று ஒபாமா நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

obama

பால்டிமோர் பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்குச்  சென்ற அவர் அங்குள்ள முஸ்லிம் சமுதாயத்தினரிடையே உரையாற்றினார். அப்போது அரசியல் காரணங்களுக்கான முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவது மிகவும் மன்னிக்க முடியாதது என்று கூறினார்.   இதன்போது ஒபாமா தெரிவித்ததாவது, பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு சிறந்த வழி என்பதே, அமெரிக்கா இஸ்லாமியர்களை ஒடுக்கவில்லை என்பதை காட்டுவதுதான். மேலும் அது குறித்து வரும் அவதூறுகளுக்கு மறுப்பு தெரிவிப்பது தான்.

அமெரிக்கா முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தினர் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இது கவலை தரக்கூடிய நேரம் மட்டுமல்லாமல் அச்சம் கொல்வதற்கான நேரமும் இதுதான்.   எல்லா அமெரிக்கர்களும் பயங்கரவாதம் குறித்து கவலை கொள்கிறீர்கள். அதற்கும் மேலாக அமெரிக்க முஸ்லிம்களான உங்களுக்கு மேலும் ஒரு கவலையுள்ளது. உங்களது ஒட்டுமொத்த சமுதாயமும் அடிக்கடி சில வன்முறை தாக்குதலுக்காக அடிக்கடி தூற்றப்படுகிறது.

நம்முடைய மத சுதந்திரத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். பயங்கரவாதத்திலிருந்து நம்முடைய நாட்டை பாதுகாக்கும் பொருட்டு, பயங்கரவாத பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.   அமெரிக்காவிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு ஒபாமா சென்றிருப்பது நாட்டை பாதுகாக்கும் பொருட்டு, பயங் கரவாத பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.   அமெரிக்காவிலுள்ள பள்ளிவாசலொன்று ஒபாமா சென்றிருப்பது இதுவே முதல்தடவையாகும் .

Comments
Loading...