Designed by Iniyas LTD
த.ம.பேரவையோடு இணைவதானால் இரு கட்சிகள் வெளியேற வேண்டும்!
தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழரசுக்கட்சி செயற்படுவதானால் தற்போது அதில் அங்கம் வகித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் வெளியேற்றப்படவேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் உள்ளிட்ட ஏற்பாட்டுக்குழுவொன்று தமது உத்தேச அரசியல் தீர்வு திட்ட வரைபு பற்றி மாவை சேனாதிராஜாவை சந்தித்து விளக்கியுள்ளது. யாழ் நகரின் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி தலைமை காரியாலயத்தில் இச்சந்திப்பு நடந்துள்ளது.
அப்போது பேச்சுக்களில் பங்கெடுத்த மாவை தான் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட பூரண விருப்பம் மற்றும் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.குறிப்பாக சீ.வி.கே.சிவஞானம், குலநாயகம் மற்றும் கனகசபாபதி போன்றவர்கள் அத்தகைய நெருக்குவாரங்களை தருவதாக தெரிவித்த மாவை இவர்களை புறந்தள்ளி பேரவையுடன் பகிரங்கமாக இணைந்து செயற்படமுடியாதுள்ளமைக்கு கவலையையும் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை இணைந்து செயற்படும் தனது விருப்பத்திற்கு கடுமையான முட்டுக்கட்டைகளையும் நெருக்குவாரங்களையும் போட்டுவருவதாகவும் மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார்.