Designed by Iniyas LTD
வடையை சுட்டுப் பழக்கிய யாழ் மக்கள் தற்போது நல்ல வடை தேடி கொழும்புக்கு செல்லும் அவல நிலை
வடையை சுட்டுப் பழக்கிய யாழ் வியாபார நிறுவனங்கள் தற்போது நல்ல வடைக்காக கொழும்பு மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு போகின்றோம்.யாழ் மாநகர முதல்வர் கவலை தெரிவித்தார்.
இன்று காலை 10மணியளவில் யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிபட்டறை யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
2010 ஆம் ஆண்டில் எச்.800 படிவங்களை வழங்கி ஏ.தர பி.தர சி.தரச்சான்றிதழ்களை வழங்கியபோது ஏ.தரத்தை 120 ஹோட்டல்களும் பி.தரத்தை 82 ஹோட்டல்களும் சி.தரத்தை 30 ஹோட்டல்களும் பெற்றிருந்தன.ஆனால் தற்போது ஏ.தரத்தை 50 ஹோட்டல்களும்,பி.தரத்தை 150 ஹோட்டல்களும்,சி.தரத்தை 32 ஹோட்டல்களும் பெற்றுள்ளது.
மேலும் ஹோட்டல் கல்வியை முன்னேற்றும் நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தோம் தற்போதைய உயர்தர பரீட்சை கல்வியில் வடமாகாணம் முதலிடம் வகித்தது.அதேபோல உணவு பாதுகாப்பிலும் முன்னிலை பெற வைக்கும் நடவடிக்கையில் நாம் களமிறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன், மருத்துவ பீடாதிபதி சந்திரசேகரம் பிள்ளை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.