தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அடையாறில் ஐ.நா.வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: 70 பேர் கைது

12654402_10208816310069103_1211760357051153518_nசென்னை அடையாறில் ஐ.நா.வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையர் அல்-ஹுசைன், அந்த நாட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டத்தை கண்டித்து, சென்னை அடையாறில் ஐ.நா. அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

போராட்த்தில் அல்-ஹூசைனை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன. மேலும் அவர்கள், அல்-ஹூசைன் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Comments
Loading...