தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஞ்சநேய கடவுளை நீதிமன்றுக்கு நேரில் வர உத்தரவு!

CbWPksSVIAQgr5Sஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள்… வெண்ணெய் சாத்துவார்கள். ஆனால் இந்துக் கடவுள் ஆஞ்சநேயரை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நீதிமன்றங்கள் எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ளன. சமீபத்தில் கூட இதே பீகாரில்தான் சீதையை கைவிட்டதாக இந்து கடவுள் ராமர் மீது கூட வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேபோல சத்தீஸ்கரில் நீதிபதி ஒருவரின் தோட்டத்தில் மேயந்த வெள்ளாடு, அதன் உரிமையாளருடன் கைது செய்யப்பட்டது. பின்னர் ஆடும், அதன் உரிமையாளரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இப்போதும் பீகார் மாநிலத்தில்தான் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி சம்மன் அனுப்பியுள்ளது நீதிமன்றம். அங்குள்ள ரோக்தாஸ் மாவட்டம் தெக்ரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிராக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசின் பொதுப்பணித்துறை புகார் தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிஉள்ளது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் நகலானது, ஆஞ்சநேயர் சிலையில் தொங்கவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகி உள்ளது. இது தற்போது விவாதத்திற்குள்ளாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வைரலாகி வருகிறது.

Comments
Loading...