தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்புக்கு சிமி தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்புக்கு தாங்களே பொறுப்பு என ஒடிசாவில் கைது செய்யப்பட்ட 4 சிமி தீவிரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  arrest

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், தடை செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஒடிசா போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்தனர்.

தாங்கள் தான் அதை திட்டமிட்டு அரங்கேற்றியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது சிமி இயக்கம் என்பது தெரியவந்துள்ளது.   கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்ற போது குண்டுவெடித்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். 14பேர் படுகாயம் அடைந்தனர்.

Comments
Loading...