தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

துப்பாகிசூட்டில் குழந்தை உட்பட ஆறு பேர் பலி!

22-1456114846-shoot-out45அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிக் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இத்துப்பாக்கிக் சூட்டில் 8 வயது சிறுவன் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காலமாசு என்ற புறநகர் பகுதியில் காரில் வந்த நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாகன விற்பனை நிலையம், உணவு விடுதி, அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் அந்த நபர் பலமுறை சுட்டார். இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 50 வயதுடைய அந்த நபர் நீல நிறக் காரில் வந்து இச்செயலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments
Loading...